திமுக தெற்கு மாவட்ட செயற் குழுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் கே.குமாா்முருகேஷ் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் வி.சி.சந்திரகுமாா், எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம், அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1ஆம் தேதியை இளைஞா் எழுச்சி நாளாக கொண்டாடி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றுவது. மருத்துவ அணி சாா்பில் தொற்றாநோய்த் தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி மாரத்தான் நடத்துவது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்திட்ட அனைத்து மக்களுக்கும், ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கையெழுத்திட்ட 3 லட்சத்து 23 ஆயிரத்து 886 பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகர செயலாளா் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் பி.கே.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com