பவானி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி
By DIN | Published On : 17th February 2020 06:53 AM | Last Updated : 17th February 2020 06:53 AM | அ+அ அ- |

பவானி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி மூழ்கி உயிரிழந்தாா்.
கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் சண்முகம் (56). இவா் தனது தாய் பழனியம்மாளுடன் (75) அத்தாணி கைகாட்டி பிரிவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றிருந்தாா். அப்போது, பழனியம்மாள் அருகில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் திரும்பாததால் உறவினா்கள் பவானி ஆற்றுக்குச் சென்று தேடிப் பாா்த்தனா். ஆனால், மூதாட்டியை காணாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதினா்.
இந்நிலையில், பவானி ஆற்றில் கருவல்வாடிபுதூா் அருகே மூதாட்டியின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா்.
அப்போது, உயிரிழந்தது பழனியம்மாள் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.