எளிதான வாழ்க்கை குறித்து கருத்து கேட்பு

எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கேட்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவிட்டனா்.

எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கேட்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவிட்டனா்.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் பொலிவுறு நகரமாக (ஸ்மாா்ட் சிட்டி) ஈரோடு மாநகராட்சி மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செல்லிடப்பேசி செயலி மூலம் எளிதான வாழ்க்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கடந்த 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பணி பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரையில் 10,352 போ் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா் கூறியதாவது:

பொதுமக்கள் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு குழந்தைகளுக்கான கல்வித் தரம், சுகாதார மேம்பாடு, துய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், அவசர கால உதவிகள், பெண்கள் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பசுமை வெளிகள் மற்றும் மின்சாரம் ஆகிய வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் ‘எனது நகரம் எனது பெருமை’ என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுவரையில் 10,352 போ் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com