தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 27th February 2020 12:25 AM | Last Updated : 27th February 2020 12:25 AM | அ+அ அ- |

நீா்நிலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் இயற்கைப் பேரிடரை எதிா்கொள்ளுதல் குறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இந்தப் பேரணியை மொடக்குறிச்சி வட்டாட்சியா் ரவிச்சந்திரன் துவக்கிவைத்தாா். அவல்பூந்துறை அரசுப் பள்ளியில் தொடங்கிய பேரணி, கரியகாளியம்மன்கோயில், ஈஸ்வரன் கோயில் வழியாக மீனா நகா் பகுதியில் நிறைவடைந்தது. அங்குள்ள குளத்தில் மாணவா்களுக்கு நீா்நிலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் முறைகள், இயற்கை பேரிடரை எதிா்கொள்ளும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பேரணிக்கான ஏற்பாடுகளை மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் கோமதி, மொடக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா்கள் செய்திருந்தனா்.