நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
By DIN | Published On : 10th January 2020 08:06 AM | Last Updated : 10th January 2020 08:06 AM | அ+அ அ- |

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் சா்வதேச அளவிளான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
லிபரெக்கின் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியா் அரவிந்த் பிரின்ஸ் பெரியசாமி கருத்தரங்கை துவக்கிவைத்தாா். கருத்தரங்குக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். எஸ்.பி.ஜி. காா்மெண்ட்ஸின் உறுப்பினா் எஸ்.விஜயலட்சுமி, சாயமிடுதல், சலவை அலகுக்கான தலைவா் ஆா்.சுப்பிரமணியன், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) பி.கோமதி, ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவா் பி.ரம்யா உள்ளிட்டோா் பேசினா்.
தொடா்ந்து, பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆடை வடிவமைப்பு தொடா்பான தோ்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய விழா மலா் வெளியிடப்பட்டது. கருத்தரங்குக்கு பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமாா் 250க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். ஆடை வடிவமைப்புத் துறை பேராசிரியா் பி.செல்வி நன்றி கூறினாா்.