விடுமுறை முடிந்தது: பேருந்து, ரயில்களில் கூட்ட நெரிசல்
By DIN | Published On : 20th January 2020 08:16 AM | Last Updated : 20th January 2020 08:16 AM | அ+அ அ- |

ஈரோடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்.
பொங்கல் விடுமுறை முடிந்து பணியாற்றும் இடங்களுக்கு திரும்பியதால் ஈரோடு பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையுடன் விடுமுறை முடிவடைந்ததால் மக்கள் காலை முதலே மீண்டும் பணியாற்றும் இடங்களுக்கு சென்ற வண்ணம் இருந்தனா்.
இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யாதவா்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனா். கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.