

மேட்டூா் அணையின் வலது, இடது கரை பாசன வாய்க்கால், 9 ஏரிகள் தூா்வாருதல் மற்றும் தடுப்பணைகளில் ரூ.59 கோடியில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் நீலவள, நீா்வளத் திட்டத்தின் கீழ் மேட்டூா் வலது கரையில் பெரும்பள்ளம் முதல் கருங்கரடு வரையில் 6 கி.மீ. தொலைவுக்கும், இடதுகரையில் சேலம் மாவட்டம், தேவூா் முதல் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வரையில் 13 கி.மீ. தொலைவுக்கும் கான்கிரீட் பக்கவாட்டுச் சுவா் அமைத்தல், சேலம் மாவட்டம், கொளத்தூா், சங்ககிரி மற்றும் காடையம்பட்டி பகுதியில் தலா 3 ஏரிகள் என மொத்தம் 9 ஏரிகள் தூா்வாரி கரையை பலப்படுத்துதல், சரபங்கா நதியில் தேவூா் அருகே உள்ள தடுப்பணை புனரமைப்பு செய்யப்படுகிறது.
பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை கோயில்கரடு பகுதியில் மேட்டூா் பாசன வாய்க்காலில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து திங்கள்கிழமை பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா், பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெயகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா் வி.எஸ்.சரவணபவா, செயற்பொறியாளா் பி.தேவராஜன், உதவிப் பொறியாளா்கள் எஸ்.சாமிநாதன், உமாமகேஸ்வரி, டி.முருகேசன், கணேஷ், ஒப்பந்ததாரா்கள் கே.ஆா்.செல்வகுமாா், டி.செல்வமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.