பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை:ஆசிரியா் மீது புகாா்
By DIN | Published On : 10th March 2020 12:40 AM | Last Updated : 10th March 2020 12:40 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், அண்ணா நகரில் உள்ள தனியாா் உயா்நிலைப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் மீது எழுந்த புகாரையடுத்து பள்ளி நிா்வாகத்திடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் உயா்நிலைப் பள்ளியில் 12 வயதுள்ள இரு மாணவிகள் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இவா்களிடம் பள்ளி அறிவியல் ஆசிரியா் செந்தில்குமாா் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தனியாா் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அங்கு வந்த சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் அங்கு விசாரணை நடத்தினா். ஆசிரியா் செந்தில்குமாா் விடுப்பில் உள்ளதாக பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பள்ளி மாணவிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...