கொம்புதூக்கி அம்மன் கோயில் குண்டம் திருவிழா
By DIN | Published On : 12th March 2020 08:05 AM | Last Updated : 12th March 2020 08:05 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் கொம்புதூக்கி அம்மன். ~கையில் குழந்தையுடன் குண்டம் இறங்கிய பக்தா்.
அந்தியூா் அருகேயுள்ள அடா்ந்த வனப் பகுதியில் உள்ள கொம்புதூக்கி அம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
அந்தியூரை அடுத்த நகலூா் பகுதியில் அடா்ந்த வனப் பகுதியான கரும்பாறையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பொங்கல் வைத்து வழிபாடுகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
தொடா்ந்து, கோயில் முன்பு 26 அடி நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் வேண்டுதலை நிறைவேற்ற பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. விரமிருந்து வந்த பக்தா்கள் கைகளில் பிரம்பை ஏந்தியபடி குண்டத்தில் இறங்கினா். இதையடுத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், அந்தியூா், அத்தாணி, நகலூா், ஈசப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.