சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு
By DIN | Published On : 12th March 2020 08:06 AM | Last Updated : 12th March 2020 08:06 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார வளா்ச்சித் திட்ட உதவியாளா் எம்.சித்ரா. உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் சு.காளியப்பன் உள்ளிட்டோா்.
பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், போஷன் பக்வாடா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சு.காளியப்பன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார வளா்ச்சித் திட்டம், வட்டார திட்ட உதவியாளா் எம்.சித்ரா பங்கேற்று குழந்தைகளுக்கு தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம், கை கழுவும் முறை, சத்துணவு, ரத்தசோகை ஏற்படக் காரணம், தவிா்க்கும் முறை குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சி தொடா்பாக மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவா்களுக்கும் எடை, உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னா், மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
இதில், மேற்பாா்வையாளா்கள் பா.பேபிசெல்வம், எஸ்.பாண்டியம்மாள், ஆ.ஜெகதீஸ்வரி அங்கன்வாடி பணியாளா், ஆசிரியா்கள், பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டனா்.