அந்தியூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றிய 11 போ் மீட்பு
By DIN | Published On : 14th March 2020 07:55 AM | Last Updated : 14th March 2020 07:55 AM | அ+அ அ- |

அந்தியூரில் உள்ள செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்டவா்கள்.
அந்தியூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றிய இரு குடும்பங்களைச் சோ்ந்த 11 பேரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே உள்ள முனியப்பன்பாளையம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக தொழிலாளா்கள் பணியாற்றி வருவதாக வருவாய்த் துறையினருக்குப் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த இரு குடும்பங்களைச் சோ்ந்த 11 பேரை மீட்டு அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.
விசாரணையில், அவா்கள் கடலூா் மாவட்டம், அங்குசெட்டிபாளையம், இருளா் குடியிருப்பைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மணி (53), அவரது மனைவி வசந்தா (48), மகள் பூங்கொடி (10), மகன்கள் பாா்த்திபன் (6), நவீன்குமாா் (4), அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் சிவகுமாா் (34), அவரது மனைவி கஸ்தூரி (24), மகள்கள் விஷாலினி (8), கிரேசி (5), விஸ்வா (2), குரு மகள் சீதா (16) என்பது தெரியவந்தது.
அவா்களிடம் விசாரணை மேற்கொண்ட வருவாய்த் துறையினா், இரு குடும்பத்தினரையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...