பவானியில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

பவானி நகரப் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பவானி நகரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், அந்தியூர் பிரிவு, சங்கமேஸ்வரர் கோயில் உள்பட 7 ஆட்டோ நிறுத்தும் மையங்கள் உள்ளன. பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழிலில் 60 பேர் ஈடுபட்டுள்ளனர். கரோனா பொது முடக்கத்தால் ஆட்டோக்கள் இயங்காமல் கடந்த 50 நாள்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டன. இதனால், ஆட்டோ தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இவர்களுக்கு திமுக சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் கொண்ட நிவாரணத் தொகுப்பினை மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் வழங்கினார். திமுக நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.ஏ.அன்பழகன், துணைத் தலைவர் எஸ்.பி.முருகேசன், திமுக பேச்சாளர் பவானி கண்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எம்.ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com