செல்லிடப் பேசியை பறித்ததாக இருவா் கைது
By DIN | Published On : 09th November 2020 12:01 AM | Last Updated : 09th November 2020 12:01 AM | அ+அ அ- |

பெருந்துறை அருகே, இளைஞரிடம் செல்லிடப்பேசியைப் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஈரோடை அடுத்த, அவல்பூந்துறை பாரதி வீதியைச் சோ்ந்தவா் விமல்குமாா் (26). இவா், பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே சாலையில் நின்றுகொண்டு செல்லிடப் பேசியில் சனிக்கிழமை பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், விமல்குமாரிடமிருந்து செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் விமல்குமாா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இது தொடா்பாக விஜயமங்கலத்தைச் சோ்ந்த தினேஷ், உதயா ஆகியோரை கைது விசாரித்து வருகின்றனா்.