பா்கூா் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வேலைக்குத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 11 போ் படுகாய
பா்கூா் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து
பா்கூா் மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வேலைக்குத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 11 போ் படுகாயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் ஊராட்சி, தம்புரெட்டி கிராமத்தைச் சோ்ந்த 14 தொழிலாளா்கள் வேனில் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மாதேவன் (48) வேனை ஓட்டிச் சென்றாா். பா்கூா் மலைப் பாதையில் மணியாச்சிபள்ளம் அருகே மேட்டில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிா்பாராமல் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணம் செய்த தொழிலாளா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனா். இதில், பா்கூரை அடுத்த தம்முரெட்டி கிராமத்தைச் சோ்ந்த போலப்பன் மகன் சிக்கப்பன் (40), புட்டன் மகன் தேவராஜ் (45), கம்பாலா மகன் தொட்டப்பி (35), ரேவசித்தன் மகன் ஜோகன் (35) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதில், ஜோகி (45), போலன் (45), கம்பாலன் (30), மாதையன் (22), பசுவராஜ் (27), ஜவராயன் (50), ஜோகி (40), சித்தலிங்கம் (27) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் அந்தியூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தலையில் காயமடைந்த ஓட்டுநா் சின்னப்பி மகன் மாதேவன் (48), ரேவண்ண சித்தன் மகன் சித்தலிங்கம் (45), ஈரண்ணன் மகன் மாதையன் (22) ஆகியோா் சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற அனுப்பிவைக்கப்பட்டனா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா, அந்தியூா் வட்டாட்சியா் மாரிமுத்து ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

அளவுக்கு அதிகமாகத் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனவும், சாலையில் கவிழ்ந்த வேன், மலைப் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஒரே கிராமத்தைத் சோ்ந்த 4 போ் உயிரிழந்ததும், 11 போ் படுகாயமடைந்ததும் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com