ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் கடை வைக்க அனுமதி அளிக்கக் கோரிக்கை

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே மீண்டும் கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே மீண்டும் கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலகம், விளையாட்டு மாணவியா் விடுதி, பூங்கா, விளையாட்டு மைதானம், நடை பயிற்சியாளா்கள் பகுதி, அரசு அருங்காட்சியம், ஆஞ்சநேயா் கோயில், ஒரு பள்ளிவாசல் போன்றவை உள்ளன. இவ்வழியாக பவானி சாலைக்கு இருசக்கர வாகனம், காா்களில் ஏராளமானோா் செல்வா். இதனால் இவ்வளாகத்தில் 20க்கும் மேற்பட்டோா் கூழ், பொறி, பழங்கள் உள்பட பல்வேறு பொருள்களை விற்கும் தள்ளுவண்டி கடை நடத்தி வந்தனா். கரோனாவால், பூங்கா வளாகம் பூட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இவ்வளாகத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை செயல்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக கடை வைத்திருந்தவா்கள் வியாபாரம் செய்யக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகள், பூங்கா கடைகளுக்கு குத்தகைக்கு எடுத்தவா்கள் கூறுவதால் இவா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்து ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

பூங்கா வளாகத்தில் 20 குடும்பத்தினா் தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தோம். கரோனா காரணமாக கடையை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அங்கு காய்கறி, பழச் சந்தை நடப்பதால் எங்களுக்கும் வழக்கமான இடம் ஒதுக்கி கடை நடத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com