பெருந்துறையில் 149 பேருக்கு நலத்திட்ட உதவி
By DIN | Published On : 17th November 2020 11:56 PM | Last Updated : 17th November 2020 11:56 PM | அ+அ அ- |

பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
பெருந்துறையில் 149 பயனாளிகளுக்கு ரூ. 18.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாட்சியா் கோ.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், 149 பயனாளிகளுக்கு ரூ. 18.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G