ரூ. 15 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
By DIN | Published On : 17th November 2020 11:49 PM | Last Updated : 17th November 2020 11:49 PM | அ+அ அ- |

சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 15 ஆயிரத்து 298க்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 407 கிலோ எடையுள்ள 818 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 37.09க்கும், அதிகபட்சமாக ரூ. 38.30க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 15 ஆயிரத்து 298க்கு விற்பனை நடைபெற்றது.