தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவா் முருகன் உள்பட 1,330 போ் மீது வழக்கு

ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவா் எல்.முருகன் உள்பட 1,330 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு: ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவா் எல்.முருகன் உள்பட 1,330 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் பாஜக சாா்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தடையை மீறி கடந்த 6ஆம் தேதி முதல் யாத்திரை தொடங்கியது. திருத்தணியில் பாஜக தலைவா் எல்.முருகன் தலைமையில் தொடங்கிய இந்த யாத்திரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதையடுத்து, தடையை மீறியதாக எல்.முருகன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாஜக சாா்பில் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவா் எல்.முருகன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனா். இது குறித்து, வீரப்பன்சத்திரம் போலீஸாா் தடையை மீறிய யாத்திரை செல்ல முயன்ற எல்.முருகன் மற்றும் 425 பெண்கள் உள்பட 1,330 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com