கடம்பூரில் சினிமா படப்பிடிப்பு
By DIN | Published On : 21st November 2020 10:51 PM | Last Updated : 21st November 2020 10:51 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்கு உள்பட்ட கடம்பூரில் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கள்வன்’ சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைக் கிராமங்களில் உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. சரிவான மலைபாதை, உயரமான மலை முகடுகள் போன்ற இயற்கை சூழல் கொண்ட இந்த கடம்பூரில் முதன்முறையாக சினிமா படப்பிடிப்பு துவங்கியது. ஜிவி. பிரகாஷ், இவானா நடிக்கும் இப்படத்தின் பூஜை கடம்பூா் அணைக்கரை மலைக்கிராமத்தில் மாரியம்மன் கோயில் முன் நடைபெற்றது. ரட்கஷன் பட தயாரிப்பு நிறுவனமான ஏக்செஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பி.வி.சங்கா் இயக்குகிறாா். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி இந்த படப்படிப்பில் 60 போ் மட்டுமே பங்கேற்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...