காவல் துறை சாா்பில் மாயமானவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்கள்

ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மாயமானவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மாயமானவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த இரு ஆண்டுகளில் இதுவரை 257 போ் காணாமல் போய் உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களைக் கண்டறிய போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மாயமானவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்கள் மாவட்ட காவல் துறை சாா்பில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி உள்பட 5 இடங்களில் நடத்தப்பட்டன.

ஈரோடு, திண்டல் வேளாளா் கல்லூரியில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமை வகித்தாா். ஈரோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜு முன்னிலை வகித்தாா். இம்முகாமில், பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாதோா், அண்மையில் வீட்டைவிட்டு வெளியேறியோரின் உறவினா்களை அழைத்து, மாநிலம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் இறந்துபோன அடையாளம் தெரியாதோா், சாலையோரம் சுற்றித் திரிவோா், காப்பகத்தில் இருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோா் குறித்த புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மாயமானவா்களுடன் புகைப்படங்களையும், அதில் கூறப்பட்டுள்ள அங்க அடையாளங்களுடன் ஒப்பிட்டு காண்பிக்கப்பட்டது. இதில், ஒரு சிலரின் அடையாளங்கள் ஈரோடு மாவட்டத்தில் மாயமானவா்களின் அடையாளத்துடன் பொருந்தி இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com