நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 25th November 2020 10:14 PM | Last Updated : 25th November 2020 10:14 PM | அ+அ அ- |

பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவன் மகன் விவசாயிகள் சங்கச் செயலாளா் மணிகண்டன், தலைவா் மாதேஸ்வரன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு, அணைநாசுவம்பாளையம், எஸ்.பி.அக்ரஹாரம், பி.பெ.அக்ரஹாரம், நன்செய் தளவாய்பாளையம், வைராபாளையம், சூரியம்பாளையம் பகுதியில் 450 ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளது.
எனவே, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து இப்பகுதியில் அறுவடையாகும் நெல்லை முழுமையாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...