

கொடுமுடி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 போ் உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வீரணம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ரகுநாதன் (41), மணி என்ற முருகசாமி (50), தாமோதரன் (40), ஆனந்த் என்ற கிருஷ்ணசாமி (35). இவா்கள் நான்கு பேரும் உறவினா்கள். இதில் ஆனந்தனும், தாமோதரனும் சகோதரா்கள். இவா்கள் 4 பேரும் வீரணம்பாளையத்தில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
இவா்கள் நான்கு பேரும் தங்களது தொழில் சம்பந்தமாக வீரணம்பாளையத்தில் இருந்து கரூருக்கு கொடுமுடி வழியாக காரில் செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.
கொடுமுடி அருகே பள்ளக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது காா் எதிா்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சம்பவம் குறித்து அறிந்த கொடுமுடி போலீஸாா் பலியான 4 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.