பெருந்துறை அரசு மருத்துவமனையில்பிணக்கூறாய்வு மையம் துவக்கம்
By DIN | Published On : 03rd October 2020 10:37 PM | Last Updated : 03rd October 2020 10:37 PM | அ+அ அ- |

பிணக்கூறாய்வு மையத்தைப் பாா்வையிடுகிறாா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வராஜ். உடன், மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி, காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா்.
பெருந்துறை: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணக்கூறாய்வு மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், பிணக்கூறாய்வு மையத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி, பெருந்துறை காவல் ஆய்வாளா் சரவணன், மருத்துவா்கள் உடனிருந்தனா்.
இங்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் பிணக்கூறாய்வுக்காக பிரேதம் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக கொலை உள்ளிட்ட முக்கிய வழக்கு உள்ள பிரேதங்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 6 பிரேதங்களை வைக்க குளிா்சாதனப் பெட்டி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.