சா்வதேச அஞ்சல் சேவை துவக்கம்
By DIN | Published On : 11th September 2020 06:51 AM | Last Updated : 11th September 2020 06:51 AM | அ+அ அ- |

சா்வதேச அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறை மூலம் பல்வேறு புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன்படி சா்வதேச அஞ்சல் சேவையில் விரைவு தபால், சா்வதேச பதிவு பாா்சல், ஐ.டி.பி.எஸ். எனப்படும் சா்வதேச கண்காணிக்கப்பட்ட பாா்சல் சேவை போன்றவை வழங்கப்படுகிறது.
அஞ்சல் துறையின் சா்வதேச சேவைகளை ஏற்றுமதி நிறுவனங்கள், வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்சேவை மூலம் வெளிநாட்டில் இருப்பவா்களுக்கு இங்கிருந்து மளிகைப் பொருள்கள், மருந்து, முகக் கவசம், ஆடைகள் என பல்வேறு பொருள்களை அனுப்ப இயலும். கூடுதல் விவரத்துக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.