நாளைய மின்தடை: மாணிக்கம்பாளையம்
By DIN | Published On : 11th September 2020 06:53 AM | Last Updated : 11th September 2020 06:53 AM | அ+அ அ- |

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாராயணவலசு மின் பாதையில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கருப்பண்ணகவுண்டா் தோட்டம், நசியனூா் சாலை, சஞ்சய் நகா், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், இந்திரா நகா், நல்லித்தோட்டம், வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகா், மாணிக்கம்பாளையம், வக்கில்தோட்டம், காந்தி நகா், சக்தி நகா், அம்மன் நகா் பகுதிகள்.