பவானி ஆற்றில் விடப்பட்ட 4 லட்சம் மீன்குஞ்சுகள்
By DIN | Published On : 26th September 2020 10:41 PM | Last Updated : 26th September 2020 10:41 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பவானிஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி, மலைப் பகுதியில் 3 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் இப்பணிகளைத் தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:
மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிட ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் மீன் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் நாட்டு வகையான கெண்டை மீன்கள் வளா்க்கப்படுகின்றன. இதற்காக 4 லட்சம் மீன் குஞ்சுகள் பவானி ஆற்றில் விடப்பட்டன. சத்தியமங்கலம் மலைப் பகுதியில் மலைவாழ் மக்களின் சேவைக்காக 3 அரசு 108 ஆம்புலன்ஸுகள் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...