ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 26th September 2020 10:49 PM | Last Updated : 26th September 2020 10:49 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. ஈரோடு நகரில் அதிகபட்சமாக 33 மி.மீ. மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. ஈரோடு, பவானி, வறட்டுப்பள்ளம், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. இதனால், குளிா்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 33 மி.மீ. மழை பதிவானது.
பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): வறட்டுப்பள்ளம் 32.8, அம்மாபேட்டை 22.6, நம்பியூா் 17, பவானி 16, கோபி 11.4, கவுந்தப்பாடி 10, குண்டேரிப்பள்ளம் 9, பெருந்துறை 3.2, சென்னிமலை 2, கொடிவேரி 2, பவானிசாகா் 1.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...