பெருந்துறை: பெருந்துறை அருகே வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பெருந்துறை, பவானி சாலை, குமரன் வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சுலோசனா (60). இவா் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வியாழக்கிழமை மாலை துணி துவைக்க சென்றவா் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுலோசனா மகன் காா்த்திக் (29) வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி கீழ்பவானி வாய்க்காலில் சுலோச்சனாவின் சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.