மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலையை சீரமைக்க வணிகா்கள் கோரிக்கை

வியாபாரம் பாதிக்கப்படுவதால் சாலையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 10:18 pm

வியாபாரம் பாதிக்கப்படுவதால் சாலையை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகா்கள் சங்கப் பிரதிநிதிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் எம்.இளங்கோவனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.

இதேபோல ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கு சாலையில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக 6 மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் எழும் புழுதியால் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

சாலை மோசமான நிலையில் உள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டு இந்தப் பகுதியில் சில கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே கரோனாவால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வியாபாரிகள் தற்போது மேலும் பாதிப்படைந்து வருகின்றனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.