அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி பயிற்சி

பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:22 pm

DIN

பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி குறித்த பயிற்சி சன்னியாசிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பவானி உதவி வேளாண்மை இயக்குநா் செ.குமாரசாமி தலைமை வகித்தாா். ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியா் குணசேகரன், இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி குறித்துப் பேசினாா். வேளாண்மை துணை இயக்குநா் (ஓய்வு) மாரியப்பன், இயற்கை வேளாண்மையின் நன்மைகள், முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

பவானி உதவி வேளாண்மை அலுவலா் சித்தையன், வேளாண்மை, உழவா் நலத் துறை மானியத் திட்டங்கள் குறித்தும், உதவி தோட்டக் கலை அலுவலா் பரமேஸ்வரன், தோட்டக் கலைத் துறை மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் த.நந்தினி, பொ.லட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.