ஈரோட்டில் பள்ளி அருகில் மின்மாற்றி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு காளைமாடு சிலை அருகில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை ஏராளமான மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளியின் நுழைவாயில் அருகில் மின்மாற்றி அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இங்கு மின்மாற்றி அமைந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனா். பெற்றோா்கள் சாா்பில் மின்வாரியத்திடமும், மாநகராட்சியிடமும் மனு அளிக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குழந்தைகளின் பெற்றோா் 20க்கும் மேற்பட்டோா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பள்ளி அருகே மின்மாற்றி அமைந்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சற்று தொலைவிலோ அல்லது வேறு இடத்திலோ மின்மாற்றி அவைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தகவலறிந்து அங்கு வந்த சூரம்பட்டி போலீஸாா் குழந்தைகளின் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய துறை அலுவலா்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்தனா். இதனையேற்று பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


