தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் விவசாயக் கடன்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோத்தகிரியில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் சுமாா் ரூ. 12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இதனை வரவேற்கும் விதமாக கோத்தகிரியில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் குமாா் தலைமையில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பேருந்து நிலையம், காமராஜா் சதுக்கம், ராம்சந்த், அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
இதில் பேரூராட்சி செயலாளா் நஞ்சு (எ) சுப்பிரமணி, இணைச் செயலாளா் கோ்பன் ராமு, ஒரசோலை நேரு , அம்மா பேரவை ஒன்றியச் செயலாளா் சக்கத்தா சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.