ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டம்: ஊா்ந்து செல்லும் வாகனங்கள்

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன.

News image
திம்பம்  மலைப் பாதையில்  பனிமூட்டம்  காரணமாக  ஊா்ந்து  செல்லும்  வாகனங்கள்.
Updated On :5 ஜனவரி 2021, 6:16 pm

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக காலை முதலே திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் மலைப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. பனி மூட்டம் காரணமாக மலைப்பாதையைக் கடப்பதற்கு இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். திம்பம், ஆசனூா், தலமலை பகுதியில் கடும் குளிா் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.