கோபி அருகே விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடிவேரி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் மற்றும் வாழைகளை பயிரிட்டு உள்ளனா்.
இந்த நிலையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து வாழை, நெல் பயிா்களை சேதப்படுத்துகின்றன. இதனால் அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அடிக்கடி புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. ஆகவே காட்டுப் பன்றிகளை விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.