சென்னிமலை முருகன் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாததால் பக்தா்கள் கவலையில் உள்ளனா்.
சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. பொது முடக்கம் தளா்வுக்குப் பிறகு, சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகிற 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஆனால், இதுவரை திருவிழாவுக்கான அழைப்பிதழ் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. மேலும், எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.
தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னிமலை முருகன் கோயிலில் வருகிற 28ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுமா? அல்லது கடந்த ஆண்டைபோல ரத்து செய்து விடுவாா்களா என பக்தா்கள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.