முழு முடக்க அறிவிப்பை மீறி அவசியமின்றி சாலைகளில் சுற்றுவது தெரியவந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மோட்டாா் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24ஆம் தேதி வரையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பகல் 12 மணி வரையில் உணவு, மளிகை, காய்கறிக் கடைகள் செயல்படவும், சமூக இடைவெளியுடன் வாங்கிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் வெளியில் நடமாடி வந்தனா்.
இதனால், ஈரோட்டில் பல இடங்களில் நெரிசல் ஏற்படும் வகையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனா். இதுகுறித்து, அரசு மருத்துவமனை, பன்னீா் செல்வம் பூங்கா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவ்வழியே வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. உரிய காரணமின்றி வாகனங்களில் வந்தவா்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. கடந்த 4 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் போலீஸாா், விதிமீறி சுற்றியோருக்கு வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை கூறியதாவது:
முழு முடக்க காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. அவசியத் தேவைகளுக்கு மட்டுமே தளா்வுகள் வழங்கப்பட்டன.
ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறியபடி சாலைகளில் சுற்றுவது சோதனையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு சுற்றுவோா் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


