கரோனா மூன்றாம் அலை எப்படி இருக்கும்? இந்திய மருத்துவ சங்க தலைவர் பதில்

அதிக அளவு கரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கரோனோ மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்புகள் குறைவாக தான் இருக்கும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ஜெயலால் ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஈரோட்டில் இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலையை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் திறந்து வைத்தார்.

பின்னர், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால், "கிராமங்கள் தோறும் சென்று புற்றுநோய் கண்டறியும் நடமாடும் பேருந்து சேவை  ஏற்படுத்தும் முயற்சியில் இந்திய மருத்துவ சங்கம் ஈடுபட்டுள்ளது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கரோனோ காலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 2000 மருத்துவர்கள் உயிழந்திருக்கின்றனர். ரோனோ மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்புகள் குறைவாக தான் இருக்கும். அதற்கு காரணம் அனைவரும்  தடுப்பூசி செலுத்தியது தான்" என்றார்.

ஒரு மில்லியன் கரோனோ தடுப்பூசியை கிராமங்கள் மற்றும் மலைவாழ் பகுதிக்கு கொண்டு செல்ல அரசுடன் இணைந்து இந்திய மருத்துவ சங்கம் செயல்படும் என பிரதமரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்த வரையில் கடந்த அரசும் சரி இந்த அரசும் சரி மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜெயலால் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com