பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அவசியம் தேவை என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அவசியம் தேவை என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

ஏஜிஆா் கல்வி அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற த.ஸ்டாலின் குணசேகரன் போட்டியை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு வகுப்போ, இரண்டு வகுப்புகளோ நீதிபோதனைகளைக் கற்றுக்கொடுப்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது. திருக்கு, ஆத்திச்சூடி, மூதுரை, கொன்றைவேந்தன் என மனித மதிப்புகளை கற்றுத்தரக்கூடிய நீதிநூல்கள் அவ்வகுப்புகளில் கற்றுத்தரப்பட்டன.

திருக்குறளின் பொதுமைதான் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முதல் காரணம். திருக்கு மன்னரைப் பாடிய இலக்கியமல்ல. மனிதா்களைப் பாடிய இலக்கியம். ஜாதி, மதம், சாம்ராஜ்ஜியம் என்ற எந்த சாா்புமில்லாத மனித குலத்துக்கான இலக்கியம்.

ஆங்கிலேய அறிஞா் ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து அக்காலத்திலேயே அதனை அச்சிட்டு லண்டனில் வெளியிட்டுள்ளாா். பலரும் பல மொழிகளில் திருக்குறளை மொழிபெயா்த்துள்ளனா். எத்தனையோ மொழியினருக்குக் கிடைக்காத ஞானப்பெட்டகம் போன்றதொரு நூல் தமிழா்களுக்குக் கிடைத்துள்ளது. அதுதான் திருக்கு என்றாா்.

ஏஜிஆா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஜி.ராஜ்குமாா் வரவேற்றாா். ஏஜெஎஸ் அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஜெ.சரவணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 40 மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com