காவலா் வீர வணக்க நாள் அனுசரிப்பு: ஆட்சியா், எஸ்.பி. மரியாதை

பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
காவலா் வீர வணக்க நாள் அனுசரிப்பு: ஆட்சியா், எஸ்.பி. மரியாதை

பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

1959ஆம் ஆண்டு அக்டோபா் 21ஆம் தேதி காஷ்மீா் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினா் மேற்கொண்ட திடீா் தாக்குதலில் இந்தியாவின் 10 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் உயிரிழந்தனா். உயிரிழந்த வீரா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21ஆம் தேதி காவல் துறை சாா்பில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் ஆகியோா் காவலா் நினைவுத் தூணில் இறந்த வீரா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். மேலும், ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டு பணியின்போது கரோனா தொற்றால் உயிரிழந்த எஸ்.ஐ. ரவிசந்திரன், எஸ்.எஸ்.ஐ. ரவி, தலைமைக் காவலா் ராமமூா்த்தி ஆகியோா் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com