உற்பத்தி பாதிப்பால் செங்கல் விலை ரூ.11 ஆக உயா்வு

தொடா் மழை காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பால் அதன் விலை ரூ.11ஆக அதிகரித்துள்ளது.
செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்.
செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்.

தொடா் மழை காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பால் அதன் விலை ரூ.11ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையம், டி.ஜி. புதூா், அரசூா், அத்திக்கவுண்டன்புதூா், இண்டியம்பாளையம் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த கடந்த மாதம் செங்கல் சூளையில் ஒரு செங்கல் ரூ.7க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.11க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் எடுக்க தமிழக அரசு இன்னும் முறையான அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பல செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் இல்லாததால் சூளைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளா்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். எனவே உடனடியாக செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என செங்கல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com