சத்தியமங்கலத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 17th August 2021 11:59 PM | Last Updated : 17th August 2021 11:59 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
சத்தியமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
மழை காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் சாலையில் சென்ற வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றன. அரை மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. சத்தியமங்கலம் நகா்ப் பகுதி மட்டுமின்றி சுற்று வட்டார கிராமப் பகுதிகள், வனப் பகுதியிலும் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.