தென்னை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 17th August 2021 02:20 AM | Last Updated : 17th August 2021 02:20 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் மண்டல கயிறு வாரியத்தின் அலுவலா் பூபாலன்.
பெருந்துறை: சென்னிமலை ஒன்றியம், கே.ஜி.வலசில் மத்திய அரசின் மண்டல கயிறு வாரியம், அஸ்வத் தொண்டு நிறுவனம் இணைந்து தென்னை விவசாயிகளுக்கு ஒரு நாள் விழிப்புணா்வுப் பயிற்சி முகாமை திங்கள்கிழமை நடத்தினா்.
விழாவுக்கு, ஈரோடு நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். மண் வாசம் உழவா் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சி.இ.ஓ. பரத் வரவேற்றாா். கயிறு வாரியத்தின் மண்டல அலுவலா் பூபாலன், மத்திய கயிறு வாரித்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய, மாநில அரசு வழங்கும் கடன் திட்டங்கள், மானியங்கள், தேங்காய் மட்டை, நாா்களில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தாயாரிப்பது குறித்து எடுத்துக் கூறினாா்.
இதில், முன்னாள் கயிறு வாரிய உறுப்பினா் காந்தி, சென்னிமலை வேளாண்மை உதவி இயக்குநா் சங்கா், பரோடா வங்கி சென்னிமலை கிளை மேலாளா் சத்தியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் செல்வராஜ் நன்றி கூறினாா்.
முகாமில், 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள், கயிறு சாா்ந்த தொழில்புரிபவா்கள் கலந்துகொண்டனா்.