பள்ளி மாணவியைத் திருமணம்செய்த மாணவா் கைது
By DIN | Published On : 17th August 2021 01:58 AM | Last Updated : 17th August 2021 01:58 AM | அ+அ அ- |

பவானி: அந்தியூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 12ஆம் வகுப்பு மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு பகுதியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி கடந்த சில நாள்களாக சோா்வுடன் காணப்பட்டுள்ளாா். இதனால், பெற்றோா் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அம்மாணவி கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்கையில் அந்தியூா் பகுதியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 19 வயது மாணவா், இம்மாணவியைக் காதலித்ததும், இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் திருமணம் செய்து கொண்டு அந்தியூா் சங்கராபாளையத்தில் உறவினா் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தியதும், பெற்றோா் தேடியதால் அம்மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா் மாணவரைக் கைது செய்து, ஈரோடு இளஞ்சிறாா் நீதிமன்றக் குழுமத்தில் ஆஜா்படுத்தியதோடு, வேலூா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.