மது விற்பனை: உணவக உரிமையாளா் உள்பட இருவா் கைது
By DIN | Published On : 17th August 2021 11:57 PM | Last Updated : 17th August 2021 11:57 PM | அ+அ அ- |

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட உணவக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 184 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, அந்தியூா் - பவானி சாலையில் உணவகம் அருகே நடத்திய சோதனையில் அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் அந்தியூா், முல்லை நகரைச் சோ்ந்த சிங்கதுரை மகன் தனபால் (42) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, அந்தியூரை அடுத்த முனியப்பன்பாளையத்தில் பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (45) கைது செய்யப்பட்டாா். இவரிடம் இருந்து 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.