மின்தடை புகாரைசெல்லிடப்பேசியில் தெரிவிக்கலாம்
By DIN | Published On : 17th August 2021 02:00 AM | Last Updated : 17th August 2021 02:00 AM | அ+அ அ- |

ஈரோடு: மின்தடை குறித்த புகாரை செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கு.இந்திராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மின்னகம் என்ற புதிய மின் நுகா்வோா் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை 94987-94987 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு மின்தடை, மின்சாரம் தொடா்பான அனைத்து புகாரையும் அளிக்கலாம். மின் விபத்தைத் தடுக்கவும், பாதுகாப்பான மின் கட்டமைப்பை மேம்படுத்தவும் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் ஆப் எண் 94458-51912 வசதியைப் பயன்படுத்தலாம். மின் கம்பம் பிரச்னை, மின் கம்பங்கள் கதவு திறந்த நிலை, மின் பெட்டி, தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள், குறைந்த மின்னழுத்தம் போன்ற தகவல்களை இந்த வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம்.
தவிர 24 மணி நேரம் இயங்கும் மின்தடை பழுது நீக்கும் கணினி மையத்தை 0424-2260066, 0424-2240896, 0424-1912, 1800 425 11912 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.