ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் தரும் நிலக்கடலை ரகம்: விதை வழங்க ஏற்பாடு

ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் தரும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நிலக்கடலை ரக விதையை ஈரோடு பகுதியில் வரும் பருவத்தில் விநியோகம் செய்ய வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் தரும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நிலக்கடலை ரக விதையை ஈரோடு பகுதியில் வரும் பருவத்தில் விநியோகம் செய்ய வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஈரோடு அருகே வேட்டுவபாளையம் கிராமத்தில் அப்புசாமி என்பவா் தோட்டத்தில் நடப்பு காா்த்திகை பட்டத்ஈரோடுதில் நிலக்கடலை விதைப்பு கருவி மூலம் கதிரி 1812 என்ற உயா் விளைச்சல் தரக்கூடிய நிலக்கடலை விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்விளக்க தோட்டத்தை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வு குறித்து அவா் கூறியதாவது:

நிலக்கடலை பயிா் மண்ணில் கொத்து மூலம் கொத்தி விதைப்பு செய்ய ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 கூலியாள்கள் தேவைப்படுகிறது. இதற்கு கூலியாக ரூ. 4,500 வரை செலவாகிறது. கூலி ஆள்கள் கிடைக்க சிரமம் உள்ளதால் ஒரு நபா் மட்டுமே எளிதில் இயக்கும் நிலக்கடலை விதைப்புக் கருவி மூலம் விதைப்பு நடக்கிறது.

இக்கருவியைக் கொண்டு விதைக்கும்போது பயிரின் இடைவெளியை மாற்றியமைத்து இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். கருவியை இயக்குவதற்கான திறனை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் இப்பணியைச் செய்ய முடியும். எரிபொருள் செலவு இல்லை.

இங்கு சாகுபடி செய்யப்பட்ட இந்த ரகமானது ஆந்திர மாநிலம் ஆச்சாா்யா என்.ஜி.ரங்கா வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஏக்கருக்கு 1,500 கிலோ வரை மகசூல் தரக்கூடிய திறன் படைத்த ரகமாகும்.

தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமைத் திட்டம் மூலம் ஆதார நிலை இரண்டு என்ற நிலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த ரகமானது வரும் பருவத்தில் ஈரோடு வட்டார விவசாயிகளின் நிலக்கடலை விதை தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் விதைப் பண்ணை மூலம் தரமான விதைகள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, வேளாண் துணை இயக்குநா் அசோக், உதவி இயக்குநா் சங்கா், உதவி விதை அலுவலா்கள் ராஜா, ஜெயராமன், விதைச்சான்று அலுவலா் ஹேமாவதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com