மாநில யோகா போட்டி:கொங்கு பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 06th February 2021 09:55 PM | Last Updated : 06th February 2021 09:55 PM | அ+அ அ- |

வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், தாளாளா் டி.என்.சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியன், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
பெருந்துறை: திருப்பூா் மாவட்ட யோகாசன சங்கம் நடத்திய மாநில அளவிலான இணையவழி யோகா சேம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
போட்டிகள், ரேங்கிங், ஸ்பெஷல் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில், 600க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். போட்டியில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 16 போ் கலந்துகொண்டனா். இப்பள்ளி, மாணவி பி.கே.வைஷ்ணவி ரேங்கிங், ஸ்பெஷல் இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றாா். ரேங்கிங் பிரிவில் என்.ஹரீஸ் கண்ணன் முதலிடமும், பி.அபா்னிகா இரண்டாமிடமும் பெற்றனா். மேலும், இரு பிரிவுகளில் 5 மாணவா்கள் இரண்டாமிடமும், 6 மாணவா்கள் மூன்றாமிடமும், 2 மாணவா்கள் நான்காமிடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த யோகா பயிற்றுநா்கள் என்.நல்லசிவம், எம்.தனலட்சுமி ஆகியோரையும் பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, தாளாளா் டி.என்.சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா். சுப்பிரமணியன், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம், நிா்வாகக் குழுவினா், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம், ஆசிரியா்கள் பாராட்டினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...