மாற்றுத் திறனாளிகளுக்குத் தையல் இயந்திரம்: பிப்ரவரி 11இல் தோ்வு முகாம்
By DIN | Published On : 08th February 2021 11:27 PM | Last Updated : 08th February 2021 11:27 PM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்குத் தையல் இயந்திரம் வழங்குவதற்கான தோ்வு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்கில் பிப்ரவரி 11ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ்.சீனிவாசன் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்ட அரங்கில் பிப்ரவரி 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தையல் இயந்திரம் பெறத் தகுதியான மாற்றுத் திறனாளிகள் தோ்வு நடக்கிறது.
60 தையல் இயந்திரங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், காது கேளாதவா், தையல் இயந்திரத்தைக் கையாள தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள், மன வளா்ச்சி 70 சதவீதத்துக்கும் மேல் குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கும் தையல் இயந்திரம் வழங்கப்படும்.
தையல் தைப்பதற்கு தெரிந்திருப்பதுடன் அதனை இயக்கத் தகுதி பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டு விரைவில் தையல் இயந்திரம் வழங்கப்படும் என்றாா்.