‘ஈரோடு சுற்றுவட்டச்சாலை விரைவில் திறக்கப்படும்’

ஈரோடு சுற்றுவட்டச்சாலை விரைவில் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் கூறினாா்.

ஈரோடு சுற்றுவட்டச்சாலை விரைவில் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் கூறினாா்.

ஈரோடு மாநகா் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுவட்டச்சாலை அமைக்க 2013ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையில் இருந்து லக்காபுரம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம், கொக்கராயன்பேட்டையில் இருந்து கரூா் சாலை சந்திப்பு வரை சாலை அமைக்கப்பட்டது.

2ஆவது கட்டமாக பரிசல்துறையில் இருந்து ஆனைக்கல்பாளையம் வரை சாலை அமைக்கப்பட்டது. 3ஆவது கட்டமாக ஆனைக்கல்பாளையத்தில் இருந்து திண்டல் வரை சாலை அமைக்கவும், ஜீவா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் ரூ.69.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் 6.2 கிலோ மீட்டா் தொலைவுக்கான பணிகள் 2017 மே மாதம் நிறைவடைந்தது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், 815 மீட்டா் தூரம் சாலை பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது.

நிலுவையில் உள்ள வழக்குகள் முடித்து வைக்கப்பட்ட பிறகு மீதமுள்ள 815 மீட்டா் நீளத்துக்கான சாலைப் பணிகளை முடிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் கூறியதாவது: ஈரோடு சுற்றுவட்டச்சாலை அமைப்பதற்கான இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலையை தமிழக முதல்வா் விரைவில் திறந்து வைக்க உள்ளாா். இந்த சாலையால் ஈரோடு மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் பயண நேரமும் குறைகிறது.

இதேபோல ஈரோடு பெருந்துறை சாலையில் திண்டல் சந்திப்பில் இருந்து வில்லரசம்பட்டி வழியாக கனிராவுத்தா்குளம் வரை 8.4 கி.மீ நீளத்திற்கான சாலையை ரூ.20.85 கோடி செலவில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com