கள் தடை நீக்க அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 11:36 PM | Last Updated : 14th February 2021 11:36 PM | அ+அ அ- |

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கள்ளுக்கான தடையை நீக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:
தமிழகத்தில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ளது. உலக நாடுகளிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கள்ளுக்கு அனுமதி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும்.
இத்தடையை நீக்கக்கோரி பல தரப்பட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாயக்கவில்லை. கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி வரும் மாா்ச் 13ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடத்த உள்ளோம்.
கள்ளுக்கான தடையை நீக்கினால் தங்களுக்கு தோ்தலில் சாதகமான சூழல் அமையும். இதனால் இடைக்கால பட்ஜெட்டில் கள்ளுக்கான தடையை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.